/* */

போலீசாரின் கட்டுக்குள் வந்த தேசிய நெடுஞ்சாலை

போலீசாரின் கட்டுக்குள் வந்த தேசிய நெடுஞ்சாலை
X

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், கருங்குழி, மேல்மருவத்தூர், செய்யூர், அச்சிறுப்பாக்கம், ஆத்தூர், சுங்கச்சாவடி உள்ளிட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவால் அனைத்து சாலைகளும் வெறிச்சோடி ஆட்கள் நடமாட்டம் இன்றி காணப்படுகின்றன.

அவசர தேவை இல்லாமல் செல்லும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் காவல்துறையினரின் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. கடைகள் அடைக்கப் பட்டுள்ளன. ஆட்டோ, டாக்சி, மற்றும் கார், இருசக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் சாலைகள் வெறிச்சோடின. காய்கறி சந்தை கடைவீதி மற்றும் இறைச்சி கடைகள் மூடப்பட்டுள்ளன சுற்றுவட்டார இடங்களில் அனைத்து கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளன. இன்று . சுபமுகூர்த்த நாள் என்பதால் இ-பாஸ் பெற்று செல்லும் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன. வழக்கமாக அதிகளவு போக்குவரத்து இருக்கும்

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலும் வாகனங்கள் ஏதுமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. மருந்து மற்றும் பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அத்தியாவசிய தேவையின்றி சுற்றித்திரிந்த இரு சக்கர வாகனங்களை அச்சிறுபாக்கம் காவல் ஆய்வாளர் தலைமையில் போலீசார் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

Updated On: 25 April 2021 3:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...