ஆலப்பாக்கம் ஊராட்சியில் வாக்குச்சீட்டு வழங்குவதில் குளறுபடி :மறுவாக்குப்பதிவு

ஆலப்பாக்கம் ஊராட்சியில் வாக்குச்சீட்டு வழங்குவதில் குளறுபடி :மறுவாக்குப்பதிவு
X
மறு வாக்குப் பதிவு நடைபெறும் ஆலப்பாக்கம் ஊராட்சி
செங்கல்பட்டு மாவட்டம் ஆலப்பாக்கம் ஊராட்சியில் வாக்குச் சீட்டு வழங்குவதில் ஏற்பட்ட குளறுபடியால் மாறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் அடங்கிய ஆலப்பாக்கம் ஊராட்சி கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவின் போது 32 வது வாக்குச்சாவடியில் 1 மற்றும் 2 வார்டு உறுப்பினருக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதில் 1வது வார்டு உறுப்பினர் சங்கர் என்பவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் 1வது வார்டுக்கு வாக்கு பதிவு இல்லை. இந்த வாக்குச்சாவடியில் ஒரு ஊராட்சி வார்டு உறுப்பினர்க்கு மட்டுமே வாக்கு பதிவு செய்ய வேண்டும்.

இதில் இரண்டு வார்டுகள் வாக்குபதிவு ஒரே பூத்தில் நடப்பதால் குளறுபடி காரணமாக இரண்டாவது வார்டு வாக்காளர் மட்டும் கொடுக்க வேண்டிய வாக்குச் சீட்டை 1 மற்றும் 2-வார்டு வாக்காளர்களுக்கும் வாக்குச்சீட்டு வழங்கப்பட்டதால் குளறுபடி ஏற்பட்டது. எதனால் இந்த வாக்குச்சாவடியில் ஊராட்சி வார்டு கான தேர்தலை மட்டும் தள்ளிவைக்கப்பட்டு இன்று மறு வாக்குப்பதிவு நடைபெற்றது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!