மேல்மருவத்தூர் போலீசாருக்கு உபகரணங்கள் வழங்கிய வணிகர்கள்!

மேல்மருவத்தூர் போலீசாருக்கு உபகரணங்கள் வழங்கிய வணிகர்கள்!
X

சோத்துப்பாக்கம் வணிகர் சங்கம் சார்பில் போலீசாருக்கு உபகரணங்கள் வழங்கிய காட்சி.

விக்கிரமராஜா பிறந்தநாளையொட்டி மேல்மருவத்தூர் போலீசாருக்கு வணிகர்கள் உபகரணங்கள் வழங்கினர்.

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தாலுகாவிற்கு உட்பட்ட மேல்மருவத்தூர் காவல்நிலையத்தில் பணியாற்றும் காவலர்களுக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா பிறந்தநாளையொட்டி சோத்துப்பாக்கம் வணிகர் சங்கத்தின் சார்பில் முன்கள பணியாளர்களான மேல்மருவத்தூர் காவலர்களுக்கு முழு முககவசம், சர்ஜிகல் முகக்கவசம், கிரிமிநாசினி ஆகியவை மேல்மருவத்தூர் இன்ஸ்பெக்டர் அமுல்ராஜிடம் ஆஷிக் மருந்தகம் மற்றும் மருத்துவமனையின் நிறுவனர் அன்சாரிஅலி வழங்கினார்.

இதில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் மாவட்ட இணை செயலாளர் அப்துல்ரஜாக், அச்சிறுப்பாக்கம் முன்னாள் மருந்தக சங்கத் தலைவர் திலீப்குமார், உள்ளிட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!