ஆதிபராசக்தி அறக்கட்டளை சார்பில் இலவச அறுவை சிகிச்சை

ஆதிபராசக்தி அறக்கட்டளை சார்பில் இலவச அறுவை சிகிச்சை
X

முகாமில் பங்கேற்ற மருத்துவர்கள். 

ஆதிபராசக்தி அறக்கட்டளை சார்பில் இலவச உதடு மற்றும் அன்னப் பிளவு அறுவை சிகிச்சை நடைபெறுகிறது.

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரின் 82 வது பிறந்த நாளை முன்னிட்டு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவமனை மற்றும் மிஷன் ஸ்மைல் மருத்துவத் தொண்டு நிறுவனம் இணைந்து வருகின்ற மார்ச் 20 முதல் 23ஆம் தேதி வரை, உதடு மற்றும் அன்னப்பிளவு சரி செய்யும் அறுவை சிகிச்சை இலவசம் முகாம் நடைபெறுகிறது. இந்த மருத்துவ முகாமில், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி உட்பட்ட பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டுள்ளது.

அந்த முகாம் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் உதடு மற்றும் அன்னப்பிளவு நோயாளிகளை கண்டறியப்பட்டு அவர்களுக்கு இலவசமாக, நாடு முழுவதும் உள்ள பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை வாய் முகம் மற்றும் தாடை அறுவை சிகிச்சை மயக்கவியல் பிரிவு போன்ற சிறப்பு மருத்துவர்களை கொண்ட மருத்துவக்குழு மூலம், சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான அறுவை சிகிச்சையை இங்கு இலவசமாக அளிக்கப்படுகிறது. நோயாளிகள் பயணம் இடம் உணவு சிகிச்சை போன்றவைகள், அறநிலை அறக்கட்ட்டளை சார்பில் இலவசமாகவே வழங்கப்படுகிறது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!