மழையால் நிரம்பியது மதுராந்தகம் ஏரி : தற்போதைய நிலவரம் இதுதான்

மழையால் நிரம்பியது மதுராந்தகம் ஏரி : தற்போதைய நிலவரம் இதுதான்
X

கோப்பு படம் 

தொடர் மழையின் காரணமாக, மதுராந்தகம் ஏரி நிரம்பியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி, அதன் முழு கொள்ளளவான 23.3 அடியை எட்டியது. தற்போது ஏரியில் 694மில்லியன் கனஅடி தண்ணீர் நிரம்பி உள்ளது. மதுராந்தகத்தை பொருத்தவரை, 126 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மதுராந்தகம் ஏரி, அதன் முழு கொள்ளளவான 23.3 அடியை எட்டி உபரிநீர் வெளியேறுகிறது.

ஏரிக்கு தற்போது 500 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது நீர்வரத்து ஆயிரம் கன அடியாக உயரும் போது ஷட்டர் மூலம் தண்ணீரை வெளியேற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர். தற்போது ஏரிக்கு வரும் 500 கன அடி தண்ணீர் , மதகு வழியாக உபரி நீராக வெளியேறும்; அதிகபட்சமாக நீர்வரத்து இருந்தால் மட்டுமே ஷட்டர் திறக்கப்பட்டு உபரி நீர் வெளியேற்றப்படும் என, பொதுப்பணித் துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் மதுராந்தகம் ஏரியில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டால், கிளை ஆற்றின் கரையோர 21 கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil