மதுராந்தகம் நெல் கொள்முதல் நிலையத்தில் கட்டாய வசூல். விவசாயிகள் பரபரப்பு புகார்
செங்கல்பட்டு மாவட்டம் ஆனைக்குன்றம் நெல் கொள்முதல் நிலையத்தில் கட்டாய வசூல் நடைபெறுவதாக புகார் அளித்த விவசாயிகள்.
செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட ஆனகுன்றம் ஊராட்சியில் அரசுநெல் கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது.
ஆனைக்குன்றம், எலப்பாக்கம், கீழ்அத்திவாக்கம், எடையாளம்,கல்லியகுணம், பாபுராயன்பேட்டை, நெடுங்கல் உள்ளிட்ட 15 கிராம விவசாயிகளுக்கு பயன்பெறும் வகையில் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் ஆனணகுன்றம் ஊராட்சியில் அமைந்துள்ளது.
இந்த அரசின் நேரடிக் கொள்முதல் நிலையத்தில் இதுவரை 54,000 நெல் மூட்டைகள் போடப்பட்டுள்ளன. விவசாயிகளிடமிருந்து 40 கிலோ எடை கொண்ட ஒரு நெல் மூட்டைக்கு 60 ரூபாய் கட்டாயமாக வசூலிக்கபடுகிறது.
விவசாயிடம் இருந்து வசூலிக்கும் பணத்தில் 60 ரூபாய்க்கு ரசீது வழங்கப்படுவதில்லை. இந்தாண்டு நெல் கொள்முதல் நிலையத்தில் போடப்பட்ட 54 ஆயிரம் மூட்டைகளுக்கு ரூபாய் 60 என்று இந்தத் தொகையினை ஆனைகுன்றம் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை, சுந்தரமூர்த்தி, உட்பட 7 பேர் கட்டாயமாக ரூபாய் 32 லட்சம் வரை வசூலித்து உள்ளனர்.
தனிநபர்கள் விவசாயிகளிடம் இருந்து வசூலிக்க அதிகாரிகளும் உடந்தையாக இருப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர், ஒரத்தி காவல் நிலையத்தில் கட்டாய வசூலை நிறுத்தக் கோரியும், விவசாயிகளிடம் இருந்து இது வரை வசூல் செய்யப்பட்ட பணத்தை திருப்பித் தரக் கோரியும் ஒரத்தி காவல்நிலையத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளனர். இது குறித்து மாவட்ட வேளான்மைத்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu