மதுராந்தகம்: வீட்டில் மர்மமாக இறந்து கிடந்த பெண்- போலீசார் விசாரணை

மதுராந்தகம்: வீட்டில் மர்மமாக இறந்து கிடந்த பெண்- போலீசார் விசாரணை
X

வைத்தீஸ்வரி.

மதுராந்தகம் அருகே வீட்டில் மர்மமாக முறையில் இறந்து கிடந்த பெண்ணின் உடலை மீட்டு, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள இந்தலூர் கிராமத்தை சேர்ந்த வைத்தீஸ்வரி; இவரது கணவர் சிலம்பரசன். இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகியுள்ளது. இதுவரை குழந்தைகள் இல்லை. வீட்டின் மாடியில் கூரை வீட்டில் குடியிருந்து வந்துள்ளனர். இன்று காலை வைத்தீஸ்வரி, மர்மமான முறையில் உடலில் பலத்த காயங்களுடன் இறந்து கிடப்பது தெரியவந்தது.

இவர் இறந்து சுமார் மூன்று நாட்களாகிவிட்ட நிலையில், துர்நாற்றம் வீசுவது கண்டு அக்கம்பக்கத்தினர் தகவல் கொடுத்ததின் பேரில், அச்சிறுப்பாக்கம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை செய்தனர். இதில், அவரது கணவர் கடந்த மூன்று நாட்களாக ஊரில் இல்லை என தெரியவந்தது. வைத்தீஸ்வர் உடலுக்கு அருகே பூச்சி மருந்து பாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து மதுராந்தகம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!