மதுராந்தகம் அருகே இளைஞர் வெட்டிப் படுகொலை, போலீசார் விசாரணை

மதுராந்தகம் அருகே இளைஞர் வெட்டிப் படுகொலை, போலீசார் விசாரணை
X

மதுராந்தகத்தில் ரவுடிகளால் படுகொலை செய்யப்பட்ட வாலிபர்.

மதுராந்தகம் அருகே முன் விரோதம் காரணமாக இளைஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள அருணாகுளம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் இதே பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுவந்ததாக கூறப்படுகிறது. இன்று அதிகாலை 2 மணியளவில் வீட்டில் தூங்கிக்கொண்டிருக்கும்போது அங்கு வந்த மர்மநபர்கள் வீட்டுக்குள் புகுந்து சரமாரியாக வெட்டியதில் வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

சம்பவம் அறிந்த மதுராந்தகம் போலீசார் வெங்கடேசனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் படுகொலை செய்யப்பட்டுள்ள வெங்கடேசன் கடந்த 2020,ல் சென்னையை சேர்ந்த டோரா கார்த்திக் என்பவரின் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 5 வது குற்றவாளியாவார்.

டோரா கார்த்திக் கும்பல் முன்விரோதம் காரணமாக இவரை படுகொலை செய்துள்ளனரா? அல்லது கஞ்சா விற்பனையில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமா. என பல்வேறு கோணங்களில் மதுராந்தகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வெங்கடேசனை கொலை செய்தது 4 பேர் கொண்ட கும்பல் எனவும் அனைவரும் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது போலீசாரின் முதல் கட்ட விசாராணையில் தெரியவந்துள்ளது.

Tags

Next Story
கடம்பூரில் வெடிபொருட்கள் பதுக்கிய 5 பேரை கைது செய்த போலீஸ்!