வள்ளலார் சங்கத்தினர் ஏழை எளியவர்களுக்கு அன்னதானம்

வள்ளலார் சங்கத்தினர் ஏழை எளியவர்களுக்கு அன்னதானம்
X

ஏழைகளுக்கு உணவு வழங்கும் வள்ளலார் சங்கத்தினர்.

மதுராந்தகத்தில் வள்ளலார் சங்கத்தினர் சார்பில் ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகரத்தில் வள்ளலார் சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபை தர்மசாலை அமைந்துள்ளது. இந்நிலையில் தமிழக அரசு கொரோனா இரண்டாம் கட்ட ஊரடங்கு அறிவித்துள்ள நிலையில் மதுராந்தகத்தில் அனைத்து உணவு விடுதிகளும் மூடப்பட்டுள்ள நிலையில் ஏழை எளியோர் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனை அறிந்த மதுராந்தகம் வள்ளலார் சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபை தர்ம சாலையில் வீடற்ற ஏழைகள், மனநலம் பாதிக்கப்பட்டோர், முதியோர்கள் ஆகியோருக்கு தினமும் 200 நபர்கள் பயன் பெறும் வகையில் காலை டிபன், மதிய உணவு, போன்றவற்றை அன்னதானமாக அளித்து வருகின்றனர். மேலும் ஏழைகளுக்கு தினமும் அன்னதானம் அளித்து வருவது மனநிறைவை அளிப்பதாக வள்ளலார் சங்கத்தின் தலைவர் கன்னியப்பன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!