மதுராந்தகம்: தேக்கமடைந்துள்ள 6000 நெல் மூட்டைகளை உடனடியாக அரசு கொள்முதல் செய்யவேண்டும், விவசாயிகள் கோரிக்கை

மதுராந்தகம்: தேக்கமடைந்துள்ள 6000 நெல் மூட்டைகளை உடனடியாக அரசு கொள்முதல் செய்யவேண்டும், விவசாயிகள் கோரிக்கை
X

மதுராந்தகம் அருகே  திறந்த வெளியில் கொள்ளுமுதலுக்காக காத்திருக்கும் நெல் மூட்டைகள்

மதுராந்தகத்தில் தேக்கமடைந்துள்ள 6000 நெல் மூட்டைகளை, உடனடியாக அரசு கொள்முதல் செய்யவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுராந்தகம் அருகே அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட ஆனைக்குன்னம் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் 3 மாதங்களாக தேக்க நிலையில் நெல் மூட்டைகள் உள்ளது. இதனால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட ஆனைக்குன்னம் ஊராட்சியில் உள்ள அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் அப்பகுதி சுற்றியுள்ள 12 கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகளின் நெல் விற்பனை செய்து வருகின்றனர்.

தமிழக அரசு விவசாயிகளின் நெல்லை 15 நாட்களுக்குள் கொள்முதல் செய்வதாக அறிவித்துள்ளது. ஆனால், மூன்று மாதங்களாக 6000 நெல் முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். வானிலை நிலையம் சில நாட்களுக்கு மழை பெய்யும் என அறிவித்துள்ளதால் திறந்த வெளியில் உள்ள நெல் மூட்டைகள் மழையில் நினைந்து வீணாகும் சூழல் உருவாகியுள்ளது.

ஆகவே, ஆனைக்குன்னம் நெல் கொள்முதல் நிலையத்தில் உள்ள நெல் மூட்டைகளை விரைந்து கொள்முதல் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென , விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
ai in future agriculture