மதுராந்தகம்:ஊரடங்கு விதியை மீறிய ஜவுளிக்கடைக்கு ரூபாய் 5000 அபராதம்

மதுராந்தகம்:ஊரடங்கு விதியை மீறிய ஜவுளிக்கடைக்கு ரூபாய் 5000 அபராதம்
X

ஊரடங்கை மீறிய பழக்கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

மதுராந்தகத்தில் ஊரடங்கு மீறி திறக்கப்பட்ட ஜவுளிக்கடைக்கு ரூபாய் 5000 அபராதம் விதிக்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகராட்சி நிர்வாகம் மற்றும் அரசு சுகாதார மையம் சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மதுராந்தகத்தில் விதிகளை மீறி திறக்கப்பட்டு இருந்த கடை உரிமையாளர்களுக்கும் ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

மேலும் மதுராந்தகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி செயல்பட்ட ஜவுளிக்கடைக்கு ரூபாய் 5,000 அபராதம் விதிக்கப்பட்டது. உரிய நேரத்தை மீறி திறக்கப்பட்டு இருந்த பழ கடைக்கு மூடி சீல் வைக்கப்பட்டது. அரசு விதிகளை மீறிய 40க்கும் மேற்பட்ட கடை உரிமையாளருக்கும் ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!