மதுராந்தகம் கிளியாற்றில் மணல் அள்ளிய 3 மாட்டு வண்டிகள் பறிமுதல்

மதுராந்தகம் கிளியாற்றில் மணல் அள்ளிய 3 மாட்டு வண்டிகள் பறிமுதல்
X

மதுராந்தகம் கிளியாற்றில் மணல் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். 3 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்தனர்.

மதுராந்தகம் கிளியாற்றில் மணல் அள்ளிய 3 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே தண்டலம் கிராமத்தில் உள்ள கிளியாற்று படுகையில் திருட்டுத்தனமாக மாட்டு வண்டிகளில் மணல் கடத்தல் செய்வதாக மேல்மருவத்தூர் காவல் நிலையத்திற்கு வந்த ரகசிய தகவலின் பேரில் நேற்று இரவு மேல்மருவத்தூர் காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது கழனிப்பாக்கம் மற்றும் அபிராமிபுரம் பகுதியைச் சேர்ந்த ஆராமுத்து, செல்லப்பன், சங்கர், ஆகிய 3 பேர் ஆற்றிலிருந்து மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி வந்தனர்இவர்கள் 3 பேரையும் கைது செய்து மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்து வழக்குபதித்து மேல்மருவத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!