மதுராந்தகம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி உயிரிழப்பு

மதுராந்தகம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி உயிரிழப்பு
X
பைல் படம்
மதுராந்தகம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சென்னை திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த கமால் என்ற விசாரணைக் கைதி உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த கமால் என்ற இளைஞர் பல்வேறு பகுதிகளில் தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாகவும், இதன் காரணமாக அவரை கைது செய்த மெரினா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்றைய முன்தினம் இரவு மதுராந்தகம் கிளை சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை முதல் கமாாலுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவருக்கு நாடித்துடிப்பு குறைந்து விட்டதாகவும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளித்து வந்த நிலையில் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!