மதுராந்தகம்: விவசாய நிலத்தில் வைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி வாலிபர் பலி!

மதுராந்தகம்: விவசாய நிலத்தில் வைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி வாலிபர் பலி!
X
மதுராந்தகம் விவசாய நிலத்தில் வைக்கப்பட்ட மின்சார வேலியில் சிக்கி அடையாளம் தெரியாத வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த ஒழுப்பாக்கம் கிராமத்தில் பிரதான தொழிலாக இருந்து வருகிறது விவசாயம். வயல்வெளியில் பயிர்களை சேதப்படுத்தும் பன்றிகளை கொள்வதற்காக சட்டவிரோதமாக மின்சார வேலிகள் அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் வயல்வெளியில் அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக இன்று காலை அவ்வழியே சென்றவர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

அங்கு விரைந்த மதுராந்தகம் காவல்துறையினர் இறந்து கிடந்தவர் இன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்து கிடந்த வாலிபர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் எதற்காக நள்ளிரவில் இப்பகுதிக்கு வந்தார் என்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் வயல்வெளியில் அதி சக்தி கொண்ட மின்சார வேலிகளை அமைத்ததாக கூறப்படும் விவசாயிகளிடமும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!