மதுராந்தகம்: வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்!
வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசி.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகில் பூதூர் பகுதியில் தனியார் வீட்டு மனை பிரிவில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் பல நாட்களாக இரவு நேரங்களில் வாகனங்களில் வந்து செல்வது வாடிக்கையாக இருந்து உள்ளது. இதனை அப்பகுதி மக்கள் கவனித்து வந்த நிலையில் ரேஷன் அரிசி ஏற்றுவதற்காக வாகனம் ஒன்றுவந்து உள்ளது.
அப்போது பின்தொடர்ந்து வந்த அப்பகுதி இளைஞர்கள், வாகனம் சென்றவுடன் அந்த வீட்டிற்குள் சென்று பார்த்த போது ரேஷன் அரிசி பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் பேரில் அங்கு வந்த குடிமைப்பொருள் அதிகாரிகள் மற்றும் படாளம் போலீசார் ஆய்வு செய்ததில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 40 கிலோ கொள்ளளவு கொண்ட 90 அரிசி மூட்டைகள் 3600 கிலோ பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து அந்த அரிசியை பறிமுதல் செய்த போலீசார் இதை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது யார் இந்த வீட்டு உரிமையாளர் யார் என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் பல மாதங்களாக இரவு நேரங்களில் லாரிகள் மூலம் வந்து அரிசி இங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு விநியோகம் செய்திருக்கலாம் எனவும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu