மதுராந்தகம் அருகே அதிமுகவில் இருந்துவிலகி 100 பேர் திமுகவில் இணைந்தனர்

மதுராந்தகம் அருகே அதிமுகவில் இருந்துவிலகி 100 பேர் திமுகவில் இணைந்தனர்
X

அதிமுகவில் இருந்து விலகிய 100 பேர், உத்திரமேரூர் எம்எல்ஏ சுந்தர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அதிமுகவில் இருந்து விலகிய 100 பேர் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம், சித்தாமூர் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பருக்கல் ஊராட்சியின் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அதிமுகவை சேர்ந்த எம்.ராமலிங்கம் அக்கட்சியில் இருந்து விலகி தனது ஆதரவாளர்கள்100 க்கும் மேற்பட்டோர் உடன் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளரும் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான க.சுந்தர் முன்னிலையில் இன்று ஒன்றிய செயலாளர் கீழ்மருவத்தூர் வி.ஏழுமலை தலைமையில் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

அப்போது அவருடன் சித்தாமூர் முன்னாள் ஒன்றிய செயலாளர் க. மு.தனசேகரன், அவைத்தலைவர் எஸ்.வெங்கடகிருஷ்ணன், கிளைசெயலாளர் எஸ்.வேதாசலம், சித்தாமூர் ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் எஸ்.சாய்முருகன், ஒன்றிய நெசவாளர் அணி அமைப்பாளர் பொன். முருகானந்தம், ஒன்றிய நெசவாளர் அணி துணை நெசவாளர் அணி துணை அமைப்பாளர் ஆர்.ஏழுமலை, மு.ஊராட்சி மன்ற தலைவர் நாகப்பன், மற்றும் கிளை கழக செயலாளர்கள் கே.வி.விவேகானந்தன், கே.நாகராஜன், ருத்ரகோட்டி, சேட்டு, கதிர்வேல், ஏகநாதன், தமிழரசன், தனசேகர், அருள், முனியாண்டி, மற்றும் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் சி.மாரிமுத்து ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story
crop opportunities ai agriculture