திமுக நிர்வாகி மீது கீழ்மருவத்தூர் தலைவர் காவல் நிலையத்தில் புகார்
திமுக ஒன்றிய செயலாளர் மீது கீழ் மருவத்தூர் ஊராட்சி தலைவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த கீழ் மருவத்தூர் திமுக ஒன்றிய செயலாளரும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தற்போதைய ஊராட்சி மன்ற தலைவரை பணிசெய்ய விடாமல் செய்வதால் மன உளைச்சலுக்கு ஆளான ஊராட்சி மன்ற தலைவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள கீழ்மருவத்தூர் ஊராட்சி மன்ற தலைவராக தற்போது முடிந்த ஊராட்சி மன்ற தேர்தலில் மாசிலாமணி என்பவர் பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரை அதே ஊராட்சியில் கடந்த 15 ஆண்டுகளாக திமுக ஒன்றிய செயலாளரும் ஊராட்சி தலைவர் பதவியில் இருந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை என்பவர் தற்போது நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் தனக்கு பதிலாக தனது மனைவி மீனாட்சி என்பவரை தேர்தலில் நிறுத்தி இருந்தார்.
இதில் மாசிலாமணிக்கும் மீனாட்சிக்கும் இடையே போட்டி நிலவியது இதில் மாசிலாமணி அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதனை பொறுத்துக் கொள்ள முடியாத முன்னாள் திமுக ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை மற்றும் பூபதி, வேணு சண்முகம், வீரராகவன் ஆகியோர் இணைந்து ஊராட்சியின் வளர்ச்சியைப் பற்றி கவலை கொள்ளாமல் நீ வெற்றி பெற்று இருந்தாலும் நாங்கதான் தலைவர் எனக் கூறிக்கொண்டு கிராமத்திற்கு மாசிலாமணி செய்ய வரும் நல்ல திட்டங்களை தடுத்து வருகின்றனர்.
இதனால் மன உளைச்சல் அடைந்த மாசிலாமணி இன்று சித்தாமூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் மேல்மருவத்தூர் காவல் நிலையத்திலும் ஏழுமலை மீது புகார் செய்துள்ளார். இதனால் கீழ்மருவத்தூர் கிராமத்தில் பரபரப்பு நிலவியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu