மதுராந்தகம்: பொதுமக்களுக்கு உள்ளாட்சி தேர்தல் விழிப்புணர்வு

மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் தேர்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் 6 மற்றும் 9ந் தேதிகளில் இரு கட்டங்காளாக நடைபெறுவதை முன்னிட்டு, மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட புக்கத்துறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தினை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான ராகுல்நாத் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் தேர்தல் பணியில் ஈடுபடுபவர்களிடம் அவர் ஆலோசனை மேற்கொண்டார்.

பின்னர் பொதுமக்களிடம் தேர்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், உதவி காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பச்சேரோ வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!