அச்சிறுப்பாக்கம் மலை மாதா தேவாலய பகுதியில் 3வது முறையாக நடந்த நில அளவு
அச்சிறுபாக்கம் மலைமாதா கோயில் பகுதியில் நில அளவை நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அச்சரப்பாக்கத்தில் உள்ள புகழ்பெற்ற மழைமலை மாதா ஆலயத்தில் 3 வது முறையாக ஜிபிஎஸ் கருவி மூலம் நில அளவு செய்தனர்.
அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட பள்ளிப்பேட்டை ஊராட்சியில் அடங்கிய மலைக்குன்று மற்றும் மேயாகால் புறம்போக்கு பகுதியினை மலை மாதா தேவாலயம் ஆக்கிரமித்துள்ளதாக செங்கல்பட்டு மாவட்டம் சோத்துப்பாக்கத்தை சேர்ந்த ராஜா என்பவர் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மனுதாரர் ராஜா முன்னிலையில் வருவாய்த்துறையினர் ஆக்கிரமித்து சொல்லப்படும் இடங்களை அளக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
அந்த உத்தரவின்படி வருவாய்த்துறையினர் கடந்த ஜூன் 16ஆம் தேதி நிலம் அளந்தனர். மேலும் மலைப்பகுதியை அளக்க ஜிபிஎஸ் கருவி கொண்டு அளக்க முடிவு செய்தனர்.
அதன்படி, இன்று குன்று பகுதியில் ஜிபிஎஸ் கருவி மூலம் தேவாலய எல்லைப் பகுதிகள் வரையறுக்கப்பட்டு மலை மாதா தேவாலயம் மதுராந்தகம் வட்டாட்சியர் நடராஜன், தலைமையிலான வருவாய்த்துறையினர் நில அளவை செய்தனர்
அப்போது அச்சிறுபாக்கம் காவல்துறை ஆய்வாளர் ஜா.இளவரசன் தலைமை கொண்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu