இளம்பெண்ணை கத்தி முனையில் மிரட்டி பணம், செல்போன் பறிப்பு

செங்கல்பட்டு அருகே உள்ள சாலவாக்கம் பகுதியில் வசித்து வருபவர் சுமையா வயது 20 சாலவாக்கம் பேருந்து நிலையம் அருகே மீன் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 4 தினங்களுக்கு முன்பு மீன்களை பதப்படுத்துவதற்காக விக்னேஷ் என்ற ஆட்டோ ஓட்டுநருடன் செங்கல்பட்டிலிருந்து ஐஸ் கட்டியை வாங்கிக் கொண்டு ஆட்டோவில் சென்று உள்ளார்.
அப்போது மாம்பாக்கம் காட்டு பகுதியில் செல்லும் போது, இருசக்கர வாகனத்தில் மதுபோதையில் வந்த 4 வாலிபர்கள் ஆட்டோவை மடக்கி ஓட்டுநர் விக்னேஷை சரமாரியாக தாக்கியுள்ளனர். ஆட்டோவில் இருந்த சுமையாவிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூபாய் 6 ஆயிரம் மற்றும் அவரது செல்போனை அந்த நபர்கள் பறித்துச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து சுமையா குடும்பத்தார் காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து, நான்கு இளைஞர்களை சாலவாக்கம் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் மெய்யூரிலிருந்து சாலவாக்கம் வரை சாலைகளில் மின் விளக்குகள் இல்லாத காரணமாக தொடர்ந்து வழிப்பறி சம்பவங்கள் அரங்கேறி வருவதாகவும் இதனை தடுக்க காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu