இல்லம் தேடி கல்வி குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

இல்லம் தேடி கல்வி குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
X

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கத்தில் இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்ட அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில் இல்லம் தேடி கல்வி குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் பேரூராட்சிக்குட்பட்ட வெங்கடேசபுரம் மற்றும் அச்சிறுப்பாக்கம் சந்தை பகுதியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் இல்லம் தேடிகல்வி கலை நிகழ்ச்சி நடைபெற்றது .

இதில் அச்சிறுபாக்கம் வட்டார வள மைய மேற்பார்வையாளர் கி.சிவராமகிருஷ்ணன், இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப்பாளர் ராஜ பாரதி , வட்டார குழு உறுப்பினர் கல்வியாளர் சீனுவாசன், மாநில ஆலோசகர் மாதவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இல்லம் தேடி கல்வி குறித்து கலைக்குழுவினர் கலைநிகழ்ச்சியில் அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை குறித்தும் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் பள்ளிக்கு எந்த விதத்திலாவது உதவி செய்வது குறித்து விளக்கம் அளித்தனர், மேலும் கிராமத்தில் உள்ள கிராம சமூக ஆர்வலர்கள் தங்களால் முடிந்த உதவிகளை அரசு பள்ளிக்கு செய்ய வேண்டும் என கலை நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து அரசு பள்ளியில் தரமான கல்வி தருவது குறித்து பாடல் மூலம் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இதில் அச்சிறுப்பாக்கம் அரிமா சங்க உறுப்பினர்கள் லயன் வி.டி.ஆர்.வி.எழிலரசன், பொறியாளர் லயன் அ.கண்ணன், லயன் ரா.முருகன், சரவணன், அச்சிறுப்பாக்கம் பேரூர் செயலாளர் எஸ்.உசேன், மாவட்ட பிரதிநிதி கே.சித்தார்த்தன், மற்றும் கஜேந்திரன், ஆனந்தகண்ணன், பார்த்தசாரதி, உட்பட பலர் கலந்து கொண்டனர் .

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!