மாணவி தற்கொலைக்கு நீதிகேட்டு இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

மாணவி  தற்கொலைக்கு நீதிகேட்டு  இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
X

மாணவி தற்கொலைக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினர்

அச்சிறுபாக்கத்தில் இந்து முன்னணியினர் மாணவி லாவண்யாவின் தற்கொலைக்கு நீதிகேட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

மாணவி லாவண்யா தற்கொலைக்கு நீதி கேட்டு அச்சிறுபாக்கம் பேரூராட்சி அலுவலகம் எதிரே இந்து முன்னணி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் பள்ளியை நிரந்தமாக மூட வேண்டும், இது போன்று வேறு பள்ளிகளில் நடைபெறாமல் இருக்க விசாரணை குழு அமைக்க வேண்டும், மாணவியின் குடும்பத்துக்கு 1 கோடி ரூபாய் நிவாரணமும் அவர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசாங்க வேலையும் தர வேண்டும், கட்டாய மதமாற்ற செய்பவர்களை கடுமையாக தண்டிக்க சட்டம் இயற்ற வேண்டும். என கோஷங்கள் எழுப்பினர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!