மாமண்டூர் பயண வழி உணவகத்தில் அரசுப் பேருந்துகள் நிற்க தடை
மாமண்டூர் பேருந்து நிலையம்.
பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட புகாரின் பேரில் தரமற்ற உணவு வழங்கிய மாமண்டூர் பயணவழி உணவகத்தில் அரசு பேருந்துகள் நின்று செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு விழுப்புரம் போக்குவரத்து கோட்டத்துக்கு உட்பட்ட மாமண்டூர் பயணவழி உணவக வளாகத்தை எம்.எஸ். அசோசியெட்ஸ் சேலம் என்ற தனியார் ஒப்பந்ததாரர் குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு மேல் அங்கு உணவு, மற்றும் தின்பண்டங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாகவும், குறிப்பாக தரமற்ற உணவு பண்டங்களை விற்பனை செய்து வருவதாக புகார்கள் எழுந்தன.
இந்நிலையில் அங்கு ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் அங்குள்ள கடைகள் மற்றும் உணவகங்களில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தரமற்ற உணவுகளை விற்பனை செய்வது, மற்றும் தின்பண்டங்களை அதிக விலைக்கு விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று முதல் மாமண்டூர் பயணவழி உணவகத்திற்கு பேருந்துகள் செல்ல தடைவிதிக்கப்பட்டது.
மேலும் புதிய தரமான உணவகத்துக்கு அனுமதி வழங்க ஏற்பாடு செய்யப்படும். அரசு பேருந்துகள் நின்று செல்லும் பயணவழி உணவகங்கள் அனைத்திலும் ஆய்வு நடத்தப்படும். தரம் குறைவான உணவு, கூடுதல் விலைக்கு வழங்கும் உணவகங்களின் ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படும். தரமான உணவு, குறைந்த விலையில் உணவு வழங்கும் நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்படும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu