அச்சிறுப்பாக்கம் ஆரோக்கிய மாதா ஆலயத்தில் புனித வெள்ளி வழிபாடு

அச்சிறுப்பாக்கம் ஆரோக்கிய மாதா ஆலயத்தில் புனித வெள்ளி வழிபாடு
X
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த புகழ்பெற்ற அச்சிறுபாக்கம் ஆரோக்கிய மழை மலை மாதா அருள் திருத்தலத்தில் புனித வெள்ளியான நேற்று சிலுவைப்பாதை பேரணி நடைபெற்றது.

அச்சிறுபாக்கத்தில் மழை மலை மாதா திருத்தலம் உள்ளது. கிறிஸ்தவர்களின் தவக்காலத்தின் 40-வது நாளான இயேசுவை சிலுவை சுமந்து சென்று சிலுவையில் அறையும் நிகழ்வாக புனித வெள்ளி அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் திருத்தல அதிபர் லியோஎட்வின் தலைமையில், தவகாலத்தில் விரதமிருந்த கிறிஸ்துவர்கள் சிலுவை சுமந்து சிலுவைப்பாதை வழிபாடு பேரணியில் பங்கேற்றனர்.

இந்த பேரணி அச்சிறுப்பாக்கம் மலையின் அடிவாரத்தில் இருந்து மலை உச்சி வரை நடைபெற்றது. இதில் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, புதுச்சேரி, மற்றும் வெளியூர், வெளிமாநில, பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் வருகிற ஞாயிறு ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அன்று ஆலயத்தில் விசேஷ வழிபாடுகள் மற்றும் பிரார்த்தனைகள் நடைபெற உள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்