கிணற்றில் மூழ்கி 9 வயது சிறுமி பலி.

கிணற்றில் மூழ்கி 9 வயது சிறுமி  பலி.
X

கிணற்றில் மூழ்கி பலியான சிறுமி கோகிலா

சூணாம்பேடு அருகில் கிணற்றில் மூழ்கி 9 வயது சிறுமி பரிதாப பலி.

செங்கல்பட்டு மாவட்டம் சூணாம்பேடு அடுத்த காவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவரது மகள் கோகிலா வயது 9 . இவர் அங்குள்ள அரசு பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று சிறுமி வீட்டில் அருகே உள்ள கிணற்றில் குளிப்பதற்காக சக தோழிகளுடன் சென்றார். அங்கு உள்ள கிணற்றில் குளித்துக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கி தத்தளித்தார். இதையடுத்து அலறல் தத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து கிணற்றில் குதித்து சிறுமியை மீட்டனர். ஆனால் அதற்குள் அவர் பலியாகி விட்டது தெரியவந்தது.

இதுகுறித்து தகவலறிந்த சூணாம்பேடு இன்ஸ்பெக்டர் விரைந்து வந்து சிறுமியின் உடலை மீட்டு மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தார். இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: பிரசாரம் முடிவுக்கு, நாளை பரபரப்பான வாக்குப்பதிவு..!