வாக்குறுதிகளை 100 நாட்களுக்குள் நிறைவேற்றுவேன்: சித்தனாக்காவூர் ஊராட்சி மன்ற தலைவர்

வாக்குறுதிகளை 100 நாட்களுக்குள் நிறைவேற்றுவேன்: சித்தனாக்காவூர் ஊராட்சி மன்ற தலைவர்
X

வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் சித்தனாக்காவூர் ஊராட்சி மன்ற தலைவர் பன்னீர்செல்வம்

கொடுத்த வாக்குறுதிகளை 100 நாட்களுக்குள் நிறைவேற்றுவேன் என சித்தனாக்காவூர் ஊராட்சி மன்ற தலைவர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்

நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் உத்திரமேரூர் அருகே உள்ள சித்தனாக்காவூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவியை சுயேட்சையாக போட்டியிட்ட பன்னீர்செல்வம் கைப்பற்றினார், இதற்காக ஊர், கிராம மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வீதி வீதியாகச் சென்று மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

மேலும் சாலை வசதி, குளங்களை சீரமைத்தல், பனவிதைகள் நடவு, மாட்டுத்தொழுவம் அமைத்தல், வீட்டுமனை பட்டாவுடன், நிரந்தர தொகுப்பு வீடுகள் வழஙகும் திட்டம், சிறுவர் பூங்கா, இளைஞர்களுக்கான விளையாட்டுத்திடல், கோயில் சுற்று சுவர் அமைத்தல் என 30 ஆண்டுகளாக பல கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும், நூறு நாட்களில் இவை அனைத்தையும் நிறைவேற்ற பாடுபடுவேன் என அவர் பொதுமக்களிடம் தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!