தமிழ்நாடு சுற்றுலா வாகன ஓட்டுநர் சங்கத்தின் மறைந்த ஓட்டுநர் குடும்பத்திற்கு நிதி உதவி

தமிழ்நாடு சுற்றுலா ஓட்டுனர் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த சூனாம்பேடு கிராமத்தில் வசித்து வந்த தமிழ்நாடு சுற்றுலா வாகன ஓட்டுநர் சங்கத்தின் மறைந்த இஸ்மாயில் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கினர்.
தமிழ்நாடு சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் மாவட்ட சார்பாக உரிமையாளர்கள் ஓட்டுநர்கள் ஒன்றிணைந்து செங்கல்பட்டு மாவட்டம் சூனாம்பேடு ஓட்டுனர் மறைந்த இஸ்மாயில் அவர்கள் குடும்பத்திற்கு 1 லட்சம் நிதி உதவி வழங்கினர்,
இதனை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டத்தின் ஆலோசனைக் கூட்டம் மற்றும் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி சூனாம்பேடு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் சூனாம்பேடு காவல் ஆய்வாளர் மதியரசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார், இந்நிகழ்வில் மாநில பொது செயலாளர் திருப்பூர் வெங்கடேசன், மாநில தலைவர் மதுரை கண்ணாயிரமூர்த்தி, மாவட்ட தலைவர் சதீஷ்குமார், மாவட்ட செயலாளர் புருஷோத்தமன், மாவட்ட பொருளாளர் தமீம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் காளிமுத்து, மற்றும் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் 38 மாவட்ட நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu