மதுராந்தகம் அருகே கொடூர விபத்து; 6 பேர் பலி
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், மதுராந்தகம் அருகே டாட்டா ஏஸ் வாகனம் விபத்தில் சிக்கி உருக்குலைந்தது. இதில் ஆறு பேர் பலியானார்கள்.
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், மதுராந்தகம் அருகே ஜானகிராம் பகுதியில் டாடா வாகனம் மீது ஈச்சர் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 6 பேர் பலியாகினர். 5பேர் பலத்த காயம் அடைந்த சம்பவம் பெரும் சோகத்தை அப்பகுதியில் ஏற்படுத்தி உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 15க்கும் மேற்பட்டவர்களுடன் டாடா ஏஸ் வாகனம் ஜானகிபுரம் என்ற இடத்தில் சென்றுக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக முன்னால் சென்றுக் கொண்டிருந்த ஈச்சர் லாரி மீது மோதியது. முன்னால் சென்ற லாரி மீது, டாடா ஏஸ் மோதிய நிலையில், பின்னால் வந்த கனகர வாகனம் டாடா ஏஸ் மீது பயங்கரமாக மோதியது. இரண்டு வாகனங்களுக்கு இடையே சிக்கிய டாடா ஏஸ் வாகனம் அப்பளம் போல் நொறுங்கியது. இதில், பயணம் செய்த 6 பேர் ரத்த வெள்ளத்தில், உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களை அங்கிருந்த சிலர் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உடனே இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்த 6 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதால், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் கோவிலுக்கு சென்றுவிட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்த போது, இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. அதிகாலை நடந்த விபத்தால் அப்பகுதியில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர்கள் விவரம்
படுகாயம் அடைந்தோர் விவரம்
இந்த விபத்து சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்ற அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இரவு நேரங்களில் மட்டுமே கல் குவாரி மற்றும் கனரக லாரிகளுக்கு, சென்னை பகுதியில் அனுமதி அளிக்கப்படுவதும், இதன் காரணமாக லாரி ஓட்டுநர்கள் விரைவாக செல்லும் நிலையில் விபத்து ஏற்படுகிறது.
மேலும், தமிழக போக்குவரத்து துறை மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் இதுபோன்ற வாகனங்களில் செல்லக்கூடாது என அறிவுறுத்தியும், இதுபோன்று விலைமதிப்பில்லாத உயிர்களை விபத்தில் இழக்கும் நிலை ஏற்படுவதாகும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu