நெல் மூட்டைகள் சாலையில் வீசி விவசாயிகள் மறியல்

நெல் மூட்டைகள் சாலையில் வீசி விவசாயிகள் மறியல்
X
அரசு நெல்கொள்முதல் நிலையங்களை திறக்க வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம்

அரசு நெல் கொள்முதல் நிலையம் திறந்து விவசாயிகளுக்கு டோக்கன் வழங்கியும், நெல் கொள்முதல் ஏற்காமல் காலம் கடத்தி வருவதால் விவசாயிகள் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகள் சாலையில் வீசி மறியலில் ஈடுபட்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள பூதூர் ஊராட்சியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக ஈசூர் கிராமத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைத்து விவசாகளிடம் இருந்து அரசு நெல் கொள்முதல் செய்து வந்தது. இதனால் பூதூர், ஈ.சூர், எல் என் புரம், கீழவளம், அரையப்பாக்கம் உள்ளிட்ட 15 கிராமங்கள் 5 ஆயிரம் ஏக்கர் விவசாயிகள் பயன் பெறுவர் ஒரு போக அறுவடையில் சுமார் 50 ஆயிரம் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுவர்.

அதே போல் கடந்த 30 தினங்களுக்கு முன்பு நெல் தூற்றும் இயந்திரம் எடை மிஷின் அனைத்தும் வந்துசேர்ந்தும் இதுவரை சுமார் 30 தினங்களாகியும் நெல் கொள்முதல் செய்யாமல் சட்ட மன்ற தேர்தலைஅதிகாரிகள் காரணம் காட்டி இன்று நாளை என அலட்சிய போக்கால் சுமார் 10 ஆயிரம் மூட்டைகள் களத்தில் தேங்கிக் கிடக்கின்றது.

தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பு நிலவியது.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!