தமிழ் புத்தாண்டில் பெய்த திடீர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி

தமிழ் புத்தாண்டில் பெய்த திடீர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி
X
தமிழ் புத்தாண்டில் பெய்த திடீர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி

செங்கல்பட்டு மாவட்டத்தில் பெய்த திடீர் கோடை மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், பவுஞ்சூர், ,மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 30 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் நெர்பயிர், கரும்பு, தர்பூசனி காய்கறிகள் பயிரிடப்பட்டுள்ளன. இதில் 80 சதவிகிதம் ஏரி நீர் பாசனத்தை நம்பியே பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்களாகும்,.

கடந்த சில தினங்களாக நெற்பயிர்கள் முதல்போக அறுவடை முடிந்த நிலையில் இரண்டாவது போகம் பயிரிடுவதற்காக ஏரி நீரை நம்பியிருந்த விவசாயிகளுக்கு தமிழ் புத்தாண்டு நாளில் திடீரென கோடை மழை பெய்து வருவது மகிழ்ச்சியளிப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர். தற்போது இரண்டாவது போகம் பயிரிடுவதற்கான பணிகளும் துவங்கியுள்ளதாகவும் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்