அ.தி.மு.க வெற்றி பெற பா.ம.க வன்னியர் சங்கம் கலந்தாய்வு கூட்டம்

அ.தி.மு.க வெற்றி பெற  பா.ம.க வன்னியர் சங்கம்  கலந்தாய்வு கூட்டம்
X
அ.தி.மு.கவை வெற்றி பெற செய்ய பா.ம.க வன்னியர் சங்கம் சார்பில் கலந்தாய்வு கூட்டம்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் நேரு நகரில் அதிமுகவை வெற்றி பெறச்செய்ய பாட்டாளி மக்கள் கட்சியின் வன்னியர் சங்கம் சார்பில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

அச்சிறுப்பாக்கம் நேருநகரில் மதுராந்தகம் தொகுதி அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல் அவர்களை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டுமெனவும் தி.மு.க.விடமிருந்து வாக்கு சதவிகிதத்தை பிரிக்க வேண்டும் என தீர்மானித்து எடுக்க வேண்டும் என்பது குறித்து கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. மதுராந்தகம் தொகுதிக்குட்பட்ட அனைத்து வன்னியர் சங்கத்தின் ஒன்றிய நகர பேரூர் தலைவர் செயலாளர் உறுப்பினர்கள் உள்ளிட்டோரை அழைத்து தேர்தல் பணி குறித்த ஆலோசனை கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்வை மாநில பொது செயலாளர் கங்காதரன், மாவட்ட செயலாளர் ஆத்தூர் கோபாலகண்ணன் ஆலோசனைபடி வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் ராஜசேகர் தலைமை ஏற்று நடத்தினார். அச்சிறுப்பாக்கம் பேரூர் செயலாளர் அரிபுத்திரன் வரவேற்றார்.மதுராந்தகம் நகர தலைவர் நாகு முன்னிலை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் ஏழுமலை பேசினார்.

இதில் அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றிய தலைவர் கார்த்திக், அச்சிறுப்பாக்கம் மத்திய ஒன்றிய தலைவர் வெங்கடேசன், மாவட்ட துணை செயலாளர் சதாசிவம், ஒன்றிய செயலாளர் ராஜசேகர், ஒன்றிய தலைவர் நந்தகோபால், செந்தில்குமார், முருகன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!