மின்னல் சித்தாமூர் ஊராட்சி மன்ற தலைவர், வார்டு உறுப்பினர்கள் பதவியேற்பு

மின்னல் சித்தாமூர் ஊராட்சி மன்ற தலைவர், வார்டு உறுப்பினர்கள் பதவியேற்பு
X

ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திராவிடம் சான்றினை பெறும் ஊராட்சி தலைவர் பாலாஜி

மின்னல்சித்தாமூர் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள மின்னல் சித்தாமூர் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா நடைபெற்றது.

அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட மின்னல் சித்தாமூர் ஊராட்சியில் கடந்த 12ஆம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தளில் மின்னல் சித்தாமூர் ஊராட்சி தலைவராக வழக்கறிஞர் பாலாஜி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திராவிடம் சான்றினை பெற்றுக்கொண்டு பொறுப்பேற்றுக்கொண்டார்.

முன்னதாக ஊராட்சி செயலர் எம்.எஸ்.தயாநிதி அனைவரையும் வரவேற்று நன்றி உரையாற்றினார். இந்நிகழ்வில் வார்டு உறுப்பினர்கள் 1வது வார்டு சித்ரா, 2வது வார்டு அஞ்சலி, 3வது வார்டு கமலக்கண்ணன், 4வது வார்டு சந்திரா, 5வது வார்டு ஆனஸ்ட்ராஜ், 6வது வார்டு ஜெயப்பிரியா, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவில் டேங்க் ஆபரேட்டர்களுக்கு மிதிவண்டி வழங்குதல், ஆபரேட்டர்களுக்கு மின்சார பழுது நீக்கும் கருவிகள் மற்றும் குடிநீர் குழாய் பழுது நீக்கும் கருவிகள் வழங்குதல், அனைத்து மின்மோட்டார்களுக்கு மின்னோக்கி கேபாசிட்டர் வழங்குதல், இ சேவை மையத்தை நமது ஊராட்சியில் 4ஜி இன்டர்நெட் வசதியுடன் செயல்பாட்டிற்கு கொண்டு வருதல், உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது,

இதில் மின்னல்சித்தாமூர் ஊராட்சியின் அனைத்து பணியாளர்கள் பொதுமக்கள் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!