மேல்மருவத்தூர் அருகே நாய்கள் கடித்து படுகாயமடைந்த மான்

மேல்மருவத்தூர் அருகே நாய்கள் கடித்து படுகாயமடைந்த மான்
X

மேல்மருவத்தூர் அருகே நாய்கள் கடித்து படுகாயமடைந்த மான்

மேல்மருவத்தூர் அருகே நாய்கள் கடித்து படுயாயமடைந்து 5 மணி நேரமாக உயிருக்கு போராடும் மானை மீட்க வனத்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மேல்மருவத்தூர் அருகே வனப்பகுதியில் இருந்து வழிதவறி வந்த மானை நாய்கள் கடித்தததில் உயிருக்கு போராடி வருகிறது. மானை மீட்டு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூர் அருகே கேசவராயன்பேட்டையில் நேற்று இரவு ராமாபுரம் காட்டுப்பகுதியில் இருந்து உணவுக்காக வழி தவறி வந்த புள்ளி மானை நாய்கள் கடித்ததில் உயிருக்குப் போராடி கத்தியது.

நாய் மற்றும் மான் சத்தத்தை கேட்ட பொதுமக்கள் நாய்களிடம் இருந்து மானை மீட்டனர். அதன் பின்னர், கேசவராயன்பேட்டை கிராம மக்கள் வனத்துறைக்கும் மற்றும் சிகிச்சை அளிப்பதற்காக கால்நடை மருத்துவருக்கும் தகவல் அளித்தனர். ஆனால் 5 மணி நேரத்திற்கு மேலாகியும் சிகிச்சை அளிக்க கால்நடை மருத்துவர் வராததால் உயிருக்கு போராடிய நிலையில் புள்ளிமான் உள்ளது. எனவே படுகாயம் அடைந்த மானை மீட்க வனத்துறையும் வராதது பொதுமக்களிடையே மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
தேர்வு இல்லாமல் நேரடி நிரந்தர பணி நியமனம்? MSW பட்டதாரிகளுக்கு நேரடி வாய்ப்பு – மாவட்ட குழந்தைகள் நலத்துறையில் வேலை