மாவட்ட அளவிலான பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு விழிப்புணர்வு முகாம்

மாவட்ட அளவிலான பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு விழிப்புணர்வு முகாம்
X

செங்கல்பட்டில் நடந்த மாவட்ட அளவிலான பிரதமரின் வேலைவாய்ப்பு முகாம்.

செங்கல்பட்டு மாவட்ட அளவிலான பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கத்தில் பாரதப் பிரதமரின் வேலை வாய்ப்பினை உருவாக்கும் திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

இந்த முகாமினை மாவட்ட தொழில் மையம், காதி மற்றும் கிராமப்புற தொழில் ஆணையம் மற்றும் காதி கிராமத் தொழில் வாரியம் ஆகியவை ஒருங்கிணைந்து நடத்தின.

இந்த முகாமில் பாரதப் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்ட நோடல் அலுவலர் பாஸ்கர், முதன்மை மாவட்ட மேலாளர் சந்தோஷ்குமார், தொழில் ஆணையர் உதவி சிறப்பு அலுவலர் செல்லத்துரை, மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் ரமணி, சோத்துப்பாக்கம் யூனியன் வங்கி கிளையின் மேலாளர் சந்தோஷ், சோத்துப்பாக்கம் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா கிளை மேலாளர் திக்விஜய்சிங் உள்ளிட்டோர் சுய தொழில் செய்வது குறித்தும், கடன் பெறுவது குறித்து, மானியம் பெறுவது உள்ளிட்ட எடுத்துரைத்தனர்.

2021-22 நிதியாண்டில் சுயதொழில் செய்ய செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும் ரூபாய் 5 கோடி வரை மானியம் ஒதுக்கப்பட்டுள்ளது. என்று நோடல் அலுவலர் பாஸ்கர் தெரிவித்தார்.

காதி மற்றும் கிராமப்புற தொழில் நலவாரிய உதவி இயக்குனர் அனுராதா நன்றி கூறினார். இந்த முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

Tags

Next Story
ai solutions for small business