danagerous accident 4 persons dead செங்கல்பட்டு அருகே லாரி மோதி சாலையைக் கடக்க முயன்ற 4பேர் பலி

danagerous accident 4 persons dead  செங்கல்பட்டு அருகே லாரி மோதி   சாலையைக் கடக்க முயன்ற 4பேர் பலி
X
danagerous accident 4 persons dead அதிக வேகத்துடன் வந்த டிப்பர் லாரி சாலையைக்கடக்க முயன்றவர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உடல் சிதைந்து பலியாயினர். விபத்துகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


danagerous accident 5 persons dead

சென்னை அருகேயுள்ள தாம்பரத்திலிருந்து செங்கல்பட்டு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த லாரியானது சாலையைக் கடக்க முயன்றவர்கள் மற்றும் பஸ்சுக்காக காத்திருந்த பொதுமக்கள் மீது மோதியதில் 6 பேர் பலியானது அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.

சென்னைக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் எப்போதுமே போக்குவரத்தானது பரபரப்பாக இருக்கும். அதிகவேகமாக செல்லும் பேருந்துகள், இருசக்கர வாகனங்கள், லாரிகள், லோடுடன் செல்லும் டிப்பர் லாரிகள் என வரிசையாக வந்துகொண்டேயிருக்கும். தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்து தலைநகரான சென்னைக்கு செல்லும் பஸ்கள் குறித்த நேரத்திற்குள் சென்னையை அடைந்துவிடவேண்டும் என காலை நேரங்களில் அதிவேகமாக செல்வதும் உண்டு. பல இடங்களில் சர்வீஸ் ரோடுகள் இருப்பதால் அடிக்கடி இருசக்கர வாகனங்களில் ரோடுகளின் குறுக்கே செல்வோரும் உண்டு.

இந்நிலையில் இன்று காலை இதுபோல் ரோட்டை இருசக்கர வாகனத்தில் கடக்க முயன்ற 3 டூவீலர்கள் மீது சாலையில் அதிவேகமாக வந்த டிப்பர் லாரி மோதியதில் சம்பவஇடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர். மேலும் இந்த லாரி அவர்கள் மீது மோதிவிட்டு எதிரே பஸ் ஸ்டாப்பில் பஸ்சுக்காக காத்திருந்த பொதுமக்கள் மீதும் மோதியதில் அ வர்களும் இந்த விபத்தில் படுகாயமடைந்தனர்.

சம்பவம் நிகழ்ந்த இடமான செங்கல்பட்டு அருகேயுள் பொத்தேரி பகுதி ஆகும். இந்த பகுதியில் தனியார் கல்லுாரி ஒன்று நீண்ட நாட்களாக செயல்படுகிறது. அதேபோல் பல தொழிற்சாலைகளும் இந்த பகுதிகளில் செயல்படுவதால் காலை நேரங்களில் வேலைக்கு செல்வோர் கட்டிட வேலைகளுக்கு செல்வோர் என எப்போதும் இந்த பகுதி பிசியாகவே இருக்கும். இதனால் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடியும் உண்டு.

லாரி மோதிய விபத்தில் டூவீலர்களில் வந்தவர்களின் உடல்கள் அனைத்துமே சிதைந்து போனதால் போலீசார் அடையாளம் கண்டு பிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர். இறந்தவர்களின் உடல்கள் அனைத்துமே லாரிக்கு அ டியில் சிக்கிக்கொண்டதால் மீட்கும் பணிநடந்து முடிந்தது. மேலும் அவர்களைப் பற்றிய விபரங்கள் ஏதேனும் கிடைக்குமா? என்ற கோணத்தில் விசாரித்து தேடி வருகின்றனர் போலீசார். விபத்தில் உயிரிழந்தவர்கள் கல்லுாரி மாணவர்கள் யாரேனும் உள்ளனரா? அல்லது பொதுமக்களா? என்று கூட அறிய முடியவில்லை. அந்த அளவிற்கு உடல்கள் சேதமடைந்துள்ளன.

மேலும் இவ்வழியானது ஏற்கனவே 4 வழிச்சாலையாகவே இருந்து வந்த நிலையில் தற்போது 8 வழிச்சாலைக்கான விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. பல இடங்களில் இந்த வேலை நடப்பதற்கான எந்தவித எச்சரிக்கை பலகை இல்லாததால் அடிக்கடி இப்பகுதிகளில் விபத்துகள் நடந்து வருவது தொடர்கதையாகி வருகிறது. இந்த விபத்தினை ஏற்படுத்திய லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த விபத்துக்கான காரணம் என்ன? இறந்தவர்கள் யார் என்பது குறி்த்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!