கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு கூட்டம்

கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு கூட்டம்
X
அச்சிறுப்பாக்கத்தில் கொரோனா நோய்த்தடுப்பு தடுப்பூசி அவசியம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி சமுதாய நலகூடத்தில் கொரோனா நோய் தடுப்பூசி போடுவது குறித்த விழிப்புணர்வு கூட்டம் அச்சிறுப்பாக்கம் காவல் ஆய்வாளர் டி.எஸ்.சரவணன் தலைமையில் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கொரோனா நோயின் தற்போதைய நிலை மற்றும் தடுப்பு குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் நோய் தடுப்பூசி போட்டுக் கொள்வது குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

வியாபாரிகள் சங்கங்கள், அரிமா சங்கங்கள், ஆட்டோ, வேன் மற்றும் மினி லாரி தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு சங்க உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் இதில் பங்கேற்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்