கருங்குழி பேரூராட்சியில் கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வெளியீடு

கருங்குழி பேரூராட்சியில் கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வெளியீடு
X

கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வெளியீடு மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரம்  பேரூராட்சி செயல் அலுவலர் கேசவன் தலைமையில் நடைபெற்றது

கருங்குழி பேரூராட்சியில் கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரம் மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்று வருகிறது

செங்கல்பட்டு மாவட்டம் கருங்குழி பேரூராட்சியில் தமிழக அரசு அறிவித்த படி கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வெளியீடு மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரம் பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி பேரூராட்சி செயல் அலுவலர் கேசவன் தலைமையில் நடைபெற்றது.

தமிழக அரசு நேற்று முதல்7 நாட்களுக்கு பொதுமக்கள் மத்தியில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்துள்ளது. அதன் பேரில் பொதுமக்கள் கூடும் இடங்கள் முக்கிய பகுதிகளில் துண்டு பிரசுரங்களை விநியோகித்து, சமூக இடைவெளியை கட்டாயமாக பயன்படுத்துவது , அடிக்கடி கைகளை சுத்தம் செய்வது, தேவையற்ற பயணம் செய்யக்கூடாது, கட்டாயமாக தடுப்பூசி போட வேண்டும் என்பதை வலியுறுத்தி பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

அப்போது வட்டார மருத்துவ அலுவலர் பிரியா, மற்றும் ஆரம்ப சுகாதார மருத்துவ குழுவினர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!