தொடர் மழையால் நெடுங்கல் - மின்னல் சித்தாமூர் இணைப்பு சாலை துண்டிப்பு

தொடர் மழையால் நெடுங்கல் - மின்னல் சித்தாமூர் இணைப்பு சாலை  துண்டிப்பு
X

செங்கல்பட்டு அருகே  தொடர்மழையால் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் பெய்த தொடர் மழையால் நெடுங்கல் - மின்னல் சித்தாமூர் ஊராட்சி இணைப்பு சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள நெடுங்கல் -மின்னல் சித்தாமூர் முக்கிய இணைப்பு சாலையாகும். பலத்த மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக இந்த சாலை இரண்டாக துண்டிக்கப்பட்டதால் வெளியம்பாக்கம், களத்தூர்,வெளியம்பாக்கம், கரசங்கால், நெடுங்கல், அல்லூர், முருங்கை, முன்னக்குளம், கொங்கரைமாம்பட்டு, களத்தூர், ஆகிய கிராமங்கள் போக்குவரத்து வழியின்றி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.

மேலும் மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு சாலை சீரமைக்கும் பணியை துரிதப்படுத்தி போக்குவரத்து இயக்க அப்பகுதி வாழ் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story
ai healthcare products