தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 4 நாட்கள் தொடர் விடுமுறை: சுங்கச்சாவடியில் நெரிசல்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 4 நாட்கள் தொடர் விடுமுறை: சுங்கச்சாவடியில்  நெரிசல்
X

வாகன நெரிசலில் சிக்கிய செங்கல்பட்டு சுங்கச்சாவடி

தீபாவளி பண்டிகையைதொடர் விடுமுறை என்பதால் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் மக்கள் அவதி

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்து அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள ஆத்தூர் சுங்கச்சாவடியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 4 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால், தென் மாவட்டங்களில் இருந்து ஒட்டுமொத்தமாக இன்று சென்னைக்கு திரும்பி படையெடுத்து வாகனங்கள் அணிவகுத்துவருவதால் கிலோமீட்டர் தூரம் வரை வாகன கடும் வாகன நெரிசல் ஏற்பட்டு வரிசையில் காத்து நின்றன.

இந்த கடும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க காவல் துறையினர், வாகனங்களுக்கு பாஸ்டெக் இருந்தும் இலவசமாக பயணிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். அப்படி இருந்தும் போக்குவரத்து நெரிசல் நிறைந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டத்திற்கு தமிழக அரசு இரண்டு நாட்கள் விடுமுறை அளித்துள்ளது. அப்படி இருந்தும் இந்த இந்த இரு நாட்கள் பள்ளி ,கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்துள்ளது. இல்லை என்றாலும் இந்த போக்குவரத்து நெரிசல் கடுமையாக இருந்திருக்கும் என பொதுமக்கள் தெரிவித்தனர்

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!