செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனாவை வரவேற்கும் சினிமா தியேட்டர்கள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனாவை வரவேற்கும் சினிமா தியேட்டர்கள்
X

மாமண்டூர் அருகே உள்ள திரையரங்கில் முகக்கவசம் அணியாமல் அனுமதிக்கப்பட்ட பார்வையாளர்கள்

செங்கல்பட்டு மாவட்ட திரையரங்கம் 80 விழுக்காடு பார்வையாளர்களை முகக்கவசம் இல்லாமல் அனுமதித்து படங்கள் திரையிடப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா முதல் அலை ஏற்பட்டது. அப்போது நாடு முழுவதும் உள்ள தியேட்டர்கள் மூடப்பட்டன.அப்போது பல மாதங்கள் தியேட்டர்கள் மூடியே இருந்தன. கொரோனா வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் வந்த பிறகே நாட்டில் திரையரங்குகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டன.

இந்தச் சூழ்நிலையில் தான் கடந்த மார்ச் மாதம் மீண்டும் கொரோனா 2ஆம் அலை பரவ தொடங்கியது. குறிப்பாகத் தமிழ்நாட்டில் 2ஆம் அலையின் சமயத்தில் வைரஸ் பாதிப்பு 35 ஆயிரம் வரை கூட சென்றது. அதன் காரணமாக மாநிலத்தில் உள்ள திரையரங்ககுளை மூட உத்தரவிடப்பட்டது. கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு வைரஸ் பாதிப்பும் மெல்லக் கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தியேட்டர்கள் திறக்கப்பட்டு திரைப்படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன. ஆனால் கொரோனாவின் மூன்றாவது அலையை வரவேற்கும் வகையில் மாமண்டூரில் உள்ள ஒரு திரையரங்கம் 80 விழுக்காடு பார்வையாளர்களை முகக்கவசம் இல்லாமல் அனுமதித்து படங்கள் திரையிடப்படுகிறது.

இதன் காரணமாக கொரோனா 3 வது அலை வேகமெடுக்க வாய்ப்புள்ளதாக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். எனவே இதுபோன்ற திரையரங்குகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டு என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!