அலமேலுபுரம் ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம் விழா

அலமேலுபுரம் ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் ஆலய  மஹா கும்பாபிஷேகம் விழா
X

அலமேலுபுரம் ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேக விழா

அலமேலுபுரம் ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம் விழா

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அடுத்த அலமேலுபுரத்தில் ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

விழாவையொட்டி யாக சாலைகள் அமைக்கப்பட்டு கணபதி ஹோமம், கோ பூஜை முதற்கால யாகசாலை பூஜைகள் நடந்தன. இரண்டாம் கால யாகசாலை பூஜைகள், மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து காலை நான்காம் கால யாகசாலை பூஜைகளும், மகா தீபாராதனையும் நடத்தப்பட்டது.

ஆலயதலைவர் சரவணன் முன்னிலையில் யாகசாலையில் இருந்து கலச கும்பங்கள் புறப்பட்டு விமானத்திற்கு சென்று, வேத மந்திரங்கள் ஓத கோயில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடத்தினர். அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் அச்சிறுப்பாக்கம் காவல் ஆய்வாளர் டி.எஸ்.சரவணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை ஆலய நிர்வாகத்தினர் வி.ரமேஷ், கே.சரவணன், ஐ.ஆனந்த், மலைநகர் து.ரமேஷ், எம்.தேவேந்திரர், ஆர்.சக்திநாதன், எஸ்.சிவராஜ் உட்பட கிராம மக்கள் உடனிருந்து சிறப்பாக செய்திருந்தனர்.

இந்த நிகழ்ச்சி, கொரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகளின்படி சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!