செங்கல்பட்டு: சிறுமியை கர்ப்பமாக்கிய மாணவர் போக்ஸோ சட்டத்தில் கைது!

செங்கல்பட்டு: சிறுமியை கர்ப்பமாக்கிய மாணவர் போக்ஸோ சட்டத்தில் கைது!
X

சித்தாமூர் காவல்நிலையம்.

திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி வயது சிறுமியை கற்பமாக்கிய கல்லூரி மாணவன் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள புளிவர்ணங்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் குணா. இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மனைவி கோவிந்தம்மாள். 17 வயதில் இளைய மகள் உள்ளார். அதே கிராமத்தை சேர்ந்த ஏகாம்பரம், வாணிஸ்ரீ தம்பதியரின் மகன் ஸ்டீபன்ராஜா (வயது 20) இவர் சென்னையில் மெக்கானிக் இன்ஜினியரிங் ஐடிஐயில் படித்து வருகிறார்.

சென்ற ஆண்டு கொரோனா தொற்று காரணமாக கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தனது சொந்த ஊரான புளிவர்ணங்கோட்டைக்கு குடும்பத்துடன் ஸ்டீபன்ராஜா வந்துள்ளார். இவருக்கும் சிறுமிக்கும் இடையே காதல் மலர்ந்தது. திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி இளம் பெண்ணை கர்ப்பமாக்கி உள்ளார்.

இப்போது அச்சிறுமி ஐந்து மாத கர்ப்பிணியான நிலையில் பெண் வீட்டார் ஸ்பன்ராஜாவை திருமணம் செய்து கொள்ள கூறியதும், இந்த பெண்ணின் கர்ப்பத்திற்கு நான் காரணமல்ல என ஸ்டீபன்ராஜ் கூறியுள்ளார்.

இது சம்பந்தமாக சிறுமியின் பெற்றோர் சித்தாமூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், காவல்துறையினர் ஸ்டீபன்ராஜாவை கைது செய்து விசாரணை நடத்தினர். இவர் அந்த சிறுமியுடன் இருக்கும் புகைபடங்களுடன் கூடிய ஆதாரங்கள் சிக்கிய நிலையில், இந்த பெண்ணின் கர்ப்பத்திற்கு நான் காரணமல்ல என ஏமாற்றி வருவதாக போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ஸ்டீபன்ராஜாவை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்