செங்கல்பட்டு: செய்யூர் அருகே காரில் மதுபானங்களை விற்றவர் கைது!

செங்கல்பட்டு: செய்யூர் அருகே காரில் மதுபானங்களை விற்றவர் கைது!
X

கைதான மது விற்றவரையும், பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்களையும் காணலாம்.

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே காரில் வைத்து மதுபானங்களை விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டார்.

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூரை அடுத்த சித்தாமூர் அருகே தேவத்தூர் கிராமத்தில் மதுபானங்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், அங்கு மேல்மருவத்தூர் இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் மற்றும் உதவி ஆய்வாளர் ஸ்ரீதரன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அந்த பகுதி வழியாக வந்த காரை மடக்கி சோதனை செய்தபோது, அதில் வெளிமாநில மதுபானங்கள் இருந்தன. இதன் மதிப்பு ரூ.1.80 லட்சம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து வெளிமாநில மது பாட்டில்கள் விற்பனை செய்த அலெக்ஸ் என்பவரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அண்ணாமலை, பார்த்திபன், மின்னலா, என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags

Next Story
ai solutions for small business