செங்கல்பட்டு: தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 3 குடும்பங்களுக்கு நிவாரண உதவி!

செங்கல்பட்டு: தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 3 குடும்பங்களுக்கு நிவாரண உதவி!
X

கூடலூர் ஊராட்சியில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 3 குடும்பங்களுக்கு மரகதம் குமரவேல் எம்எல்ஏ நிவாரண உதவி வழங்கினார்.

செங்கல்பட்டு கூடலூர் ஊராட்சியில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மூன்று குடும்பங்களுக்கு எம்எல்ஏ மரகதம் குமரவேல் நிவாரண உதவி வழங்கினார்.

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுபாக்கம் ஒன்றியம் கூடலூர் ஊராட்சிக்கு உட்பட்ட கழனிபாக்கம் கிராமத்தில் வசிப்பவர் லோகநாதன். இவரது கூரை வீட்டில் மின் கசிவின் காரணமாக தீவிபத்து ஏற்பட்டது. தீ மளமளவென அருகிலுள்ள சங்கர், சுப்புராயன், ஆகிய வீடுகளுக்கும் பரவியது.

இதனை அறிந்த மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல், தீ விபத்தில் பாதிக்கப்பட்ட லோகநாதன், சங்கர், சுப்புராயன் ஆகிய 3 குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

அதனைத் தொடர்ந்து, நிவாரண உதவியாக ரூ. 5000 ரொக்கப்பணம், அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் சேலை, வேட்டி போர்வை ஆகியவற்றை அச்சிறுப்பாக்கம் அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் பெரும்பாக்கம் சி.விவேகானந்தன் முன்னிலையில் வழங்கினார்.

இதில், கழனிபாக்கம் மீனவர் அணி ஒன்றிய செயலாளர் சீனிவாசன், கண்ணாயிரம், கமலக்கண்ணன், ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்