செங்கல்பட்டு:பிரேக்ஸ் இந்தியா நிறுவனம் சார்பில் ஆக்ஸிஜன் செறிவூட்டிகள்!

செங்கல்பட்டு:பிரேக்ஸ் இந்தியா நிறுவனம் சார்பில்  ஆக்ஸிஜன் செறிவூட்டிகள்!
X

பிரேக்ஸ் இந்தியா நிறுவனம் சார்பில் ரூ.5 லட்சம் மதிப்பிலான ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியபோது.

பிரேக்ஸ் இந்தியா நிறுவனம் சார்பில் ரூ.5 லட்சம் மதிப்பிலான ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டது.

கொரோனா பரவலின் இரண்டாம் அலை காரணமாக தமிழகம் முழுவதும் கடுமையான பாதிப்பு அடைந்துள்ளது. இந்நிலையில் அரசுக்கு உதவும் விதமாக பல்வேறு தொண்டு நிறுவனங்கள் நன்கொடைகள் வழங்கி வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடர்ந்து நன்கொடையாளர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம் பொலம்பாக்கம் பகுதியில் உள்ள பிரேக்ஸ் இந்தியா நிறுவனம் சார்பில் ரூ. 5-லட்சம் மதிப்பிலான ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான்லூயிஸிடம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. இதுவரை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு சுமார் 250-க்கும் மேற்பட்ட ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!