நகைக்கடை கொள்ளை: தடுத்த ஆட்டோ டிரைவர் மீது கொலைவெறித் தாக்குதல்

நகைக்கடை கொள்ளை: தடுத்த ஆட்டோ டிரைவர் மீது கொலைவெறித் தாக்குதல்
X
மதுராந்தகம் அருகே நகை கடை பூட்டை உடைக்கும் பொழுது தடுக்கச் சென்ற ஆட்டோ டிரைவர் மீது கொள்ளையர்கள் கொலைவெறித் தாக்குதல்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள சோத்துப்பாக்கத்தில் இயங்கிவரும் சக்தி சிவா நகை மற்றும் அடகு கடையில் இருசக்கர வாகனத்தில் வந்த 3 மர்ம நபர்கள் நகைக்கடையில் கொள்ளையடிக்க, கடை முன்பு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை உடைத்து அதன் கேபிள்களை அறுத்தும் பூட்டை உடைத்து கொண்டிருந்தபோது, அவ்வழியாக சென்ற அதே பகுதி ஆட்டோ டிரைவர் தியாகு என்கின்ற தியாகராஜன் சத்தம் வருவதை அறிந்து திருட முயன்ற கொள்ளையர்களை தடுத்துள்ளார்.


ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள் அவர்கள் கையில் வைத்திருந்த இரும்பு கம்பியை கொண்டு ஆட்டோ டிரைவர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தி உள்ளனர். ஆட்டோ டிரைவர் போலீசாருக்கு தகவல் கொடுத்துவிடுவார் என்கின்ற அச்சத்தில் ஆட்டோவில் இருந்த சாவியை பிடுங்கி கொண்டு ஆட்டோ இயங்காத வண்ணம் அதில் இருந்த அனைத்து கேபிளையும் அறுத்து விட்டு மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுவிட்டனர். ஆட்டோ டிரைவர் முயற்சியால் பெரும் கொள்ளை சம்பவம் முறியடிக்கப்பட்டது. இருந்தாலும் சோத்துபாக்கம் பூங்கா நகர் பகுதியில் அடிக்கடி கொள்ளை சம்பவம் நடைபெறுவதால் பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். இச்சம்பவம் குறித்து மேல்மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story
ai solutions for small business