தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு திரண்டு சென்ற வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்

தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு திரண்டு சென்ற வாகனங்களால்  போக்குவரத்து நெரிசல்
X

சென்னை சாலையில் செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய வாகனங்கள்

தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு அதிக வாகனங்கள் சென்றதால் செங்கல்பட்டு, ஆத்தூர் சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல்

செங்கல்பட்டு மாவட்டம், பரனூர் மற்றும் மதுராந்தகம் அருகே உள்ள ஆத்தூர் ஆகிய தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச்சாவடிகளில் தென் மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு அதிகப்படியான பேருந்துகள், இருசக்கர வாகனங்கள் செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

ஆங்கில புத்தாண்டு மற்றும் பொங்கல் நாளை முன்னிட்டு தன்மாவட்டங்களில் இருந்தும் சென்னைக்கு அதிகபடியான ஆம்னி பேருந்துகள் அணிவகுத்துச் செல்கின்றன. இதனால் பரனூர் மற்றும் மதுராந்தகம் அருகே உள்ள ஆத்தூர் சுங்கச்சாவடிகளில் அதிகாலையிலிருந்து, சுமார் 5 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசலை கட்டுபடுத்த போதிய காவலர்களை நியமிக்கவேண்டும் என பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
ai solutions for small business