மதுராந்தகத்தில் மின்சாரம் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு வார விழா

மதுராந்தகத்தில் மின்சாரம் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு வார விழா
X

செங்கல்பட்டு மாவட்டம் மின் பகிர்மான மதுராந்தகம் கோட்டம் சார்பாக மின்சார சேமிப்பு வார விழா நடைபெற்றது

மதுராந்தகத்தில் மின்சாரம் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு வார விழா நடைபெற்றது

செங்கல்பட்டு மாவட்டம் மின் பகிர்மான மதுராந்தகம் கோட்டம் சார்பாக மின்சார சேமிப்பு வார விழா, வேடந்தாங்கல் அரசு மேல்நிலைப்பள்ளி, மதுராந்தகம் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் மாலோலன் கலைக் கல்லூரியில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மேற்பார்வை பொறியாளர் மணிமாறன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மதுராந்தகம் செயற்பொறியாளர் முனைவர் ச.கிருபானந்தன் கலந்து கொண்டு, மின் சிக்கனம் மற்றும் சேமிப்பு குறித்து மாணவர்களிடையே உரையாற்றினார். மாணவர்களும் மின் சிக்கனம் பற்றி பேசினர். அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

இதில் செங்கல்பட்டு, மறைமலைநகர் பகுதி செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள், மக்கள் தொடர்பு மற்றும் மேம்பாடு கணினி மேலாளர் மற்றும் கோட்டத்தின் உதவி செயற்பொறியாளர்கள் மின் வாரிய பணியாளர்கள், மற்றும் கல்லூரியின் முதல்வர் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
ai as the future