மம்தாபானர்ஜி படத்தை எரித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

மம்தாபானர்ஜி படத்தை எரித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம்
X
மேற்கு வங்கத்தில் பாஜகவினர் மீது தாக்குதல் நடத்தும் மம்தா பானர்ஜியை கண்டித்து அச்சிறுபாக்கத்தில் அவரது படத்தை எரித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம்.

மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த சில நாட்களாக முன்னாள் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பாஜகவை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் கடுமையாகத் தாக்கப்பட்டும், படுகொலை செய்யப்பட்டும் வருகின்றதை கண்டிக்கும் வகையில் செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கம் ஒன்றிய பாஜக சார்பில் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய தலைவர் முருகன் தலைமையில் நடந்தது. இதில் மாவட்ட பொது செயலாளர் தயாளன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கண்டன உரையாற்றினர்.

இதில் பாஜக உறுப்பினர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மம்தாவை கண்டித்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து மம்தா பானர்ஜிக்கு எதிராக கோஷம் போட்டுக்கொண்டே திடீரென அவரது திருவுருவப் படத்தை செருப்பால் அடித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக வன்முறை தொடர்ந்து நடைபெற்றால் அனைத்து மாநிலங்களிலும் மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மற்றும் நிர்வாகிகளுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!