செங்கல்பட்டு: டாஸ்மாக் மதுக்கடைகள் திறப்பதை கண்டித்து பா.ஜ.கவினர் ஆர்ப்பாட்டம்!

செங்கல்பட்டு: டாஸ்மாக் மதுக்கடைகள் திறப்பதை கண்டித்து பா.ஜ.கவினர் ஆர்ப்பாட்டம்!
X

டாஸ்மாக் மதுக்கடைகள் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுராந்தகத்தில் பா.ஜ.கவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்க எதிர்ப்பு தெரிவித்து மதுராந்தகத்தில் பா.ஜ.கவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகம் முழுவதும் நாளை டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதை கண்டித்து செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கம் ஒன்றியம் மோகல்வாடி கிராமத்தில் பா.ஜ.க. மாவட்ட தலைவர் பலராமன், ஒன்றிய தலைவர் முருகன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர், நாளை மதுக்கடை திறப்பதை கண்டித்து, தமிழக அரசுக்கு எதிரான பதாகைகள் ஏந்தியபடி, கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Tags

Next Story
crop opportunities ai agriculture